குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் சிறப்பு குறைதீர் அமர்வு


குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் சிறப்பு குறைதீர் அமர்வு
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் நாளை திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா மகளிர் மேல்நிலை பள்ளியில் சிறப்பு குறைதீர் அமர்வு நடைபெற உள்ளது.

சிவகங்கை

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் நாளை(சனிக்கிழமை) திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா மகளிர் மேல்நிலை பள்ளியில், காலை 9 மணியளவில், சிறப்பு குறைதீர் அமர்வு நடைபெற உள்ளது.

இதில், காணாமல் போன குழந்தைகள் கடத்தல், நிதி ஆதரவு (மாதம் ரூ.4000 வீதம்), குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், ஆதரவற்ற குழந்தைகள், இல்லம் தேவைப்படும் குழந்தைகள், குழந்தை திருமணம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், சட்ட உதவி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் இந்த அமர்வில் கலந்து கொண்டு நேரடியாக புகார் மனுக்களை அளிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் ஆஷாஅஜீத் தெரிவித்துள்ளார்.


Next Story