காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்


காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்
x

க்ள்ளக்குறிச்சி பகுதியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே காட்டனந்தல், தென்கீரனூர், மலைக்கோட்டாலம், விளம்பார் ஆகிய கிராமங்களில் தமிழக அரசின் சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு மேலூர் வட்டார மருத்துவ அலுவலர் பால தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். இதில் டாக்டர் சவுந்தர்யன் மற்றும் மருத்துவக்குழுவினர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சளி, காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளதா என்று பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டனர். முகாமில் மொத்தம் 178 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சுப்பிரமணியன், நேர்முக உதவியாளர் ஆறுமுகம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் ரவி, சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் ஜெயக்குமார், அரவிந்தன், பிரவீன், கலைவாணன் மற்றும் செவிலியர்கள் அபிராமி, பிரியதர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story