சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்கள்


சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்கள்
x

வாணியம்பாடி அருகே நடந்த சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக, சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பசுபதி தலைமையில் முகாம் நடைபெற்றது. மருத்துவ அலுவலர் அருள் பிரசாத் முன்னிலை வகித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாணியம்பாடி தாசில்தார் சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் திருப்தி கவுண்டர், சுகாதாரத் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர். இதே போல் செட்டியப்பனூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாமையும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தனஜ்ஜெயன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


Next Story