காய்ச்சல் குறித்த சிறப்பு பரிசோதனை முகாம்


காய்ச்சல் குறித்த சிறப்பு பரிசோதனை முகாம்
x

காய்ச்சல் குறித்த சிறப்பு பரிசோதனை முகாம் நடந்தது.

கரூர்

புகழூர் நகராட்சி காந்தி மண்டபத்தில் வாங்கல் வட்டார சுகாதாரத்துறை சார்பில் வைரஸ் காய்ச்சல் குறித்த சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் நடமாடும் மருத்துவமனை மருத்துவகுழு மருத்துவர் ரஞ்சனி தலைமையில் மருத்துவக்குழுவினர் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள், முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். பின்னர் ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடல் பரிசோதனை, சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். பின்னர் அவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் அதிக காய்ச்சலாக இருந்தவர்களை அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காய்ச்சல் பரப்பாமல் தடுப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


Next Story