தனிப்பிரிவு போலீசாருக்கு சிறப்பு நுண்ணறிவு பயிற்சி
தனிப்பிரிவு போலீசாருக்கு சிறப்பு நுண்ணறிவு பயிற்சி அளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட தனிப்பிரிவு போலீசாருக்கான சிறப்பு நுண்ணறிவு பயிற்சி நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்க் தலைமை தாங்கினார். தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராணி முன்னிலை வைத்தார். சென்னை உளவுத்துறை சிறப்பு பயிற்சி பள்ளி துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த் கலந்துகொண்டு, தீவிரவாத ஊடுருவலை தடுத்தல், பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து முன்னரே கண்டறியும் முறை தொடர்பான நுண்ணறிவு பயிற்சியை அளித்தார். மேலும் கோவில் திருவிழாக்களில் ஏற்படும் பிரச்சினைகள், கலவரங்களை கையாளும் முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story