கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை


கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை
x

கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரணை நடத்தினர்.

திருச்சி

ராமஜெயம் கொலை வழக்கு

திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. ஆகியோர் விசாரித்த நிலையில், தற்போது கோர்ட்டு கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரித்து வருகிறார்கள்.

கொலை நடந்து 10 ஆண்டுகள் கடந்து விட்டபோதிலும், கொலையாளிகள் யார்? என்பது தெரியவில்லை. இதையடுத்து இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய பிரபல ரவுடிகள் உள்பட 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உள்ளனர். இதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் விசாரணை

இதற்கிடையே ராமஜெயம் விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ளவராக இருந்தார். கடந்த 2010-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடத்துவது தொடர்பாக அவருக்கும், சிலருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் சிலரிடம் விசாரணை நடத்தினார்கள்.


Next Story