சிறப்பு மருத்துவ முகாம்


சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 21 Aug 2023 12:15 AM IST (Updated: 21 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணியில் சிறப்பு மருத்துவ முகாம்

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் கீழையூர் வட்டாரம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை மற்றும் வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி இணைந்து, கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முகாமிற்கு வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற தலைவர் டயானாசர்மிளா தலைமை தாங்கினார். கீழையூர் வட்டார ஆத்மா குழு தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். முகாமில் பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வருகை தரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் கலந்துகொண்டு நவீன சிகிச்சை முறையில் பரிசோதனைகள் மற்றும் அது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். முகாமில் ஆத்மா குழு உறுப்பினர் மரிய சார்லஸ், திருப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் பத்மபிரியா, மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி, வேளாங்கண்ணி மருத்துவ அலுவலர் மோகன்தாஸ், மாவட்ட நல கல்வியாளர் மணவாளன், வேளாங்கண்ணி சுகாதார ஆய்வாளர்கள் மோகன், பிரபாகரன், கிராம சுகாதார செவிலியா்கள், வேளாங்கண்ணி பேரூராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனா்.


Next Story