சிறப்பு மருத்துவ முகாம்
அரகண்டநல்லூர் பேரூராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்
சமீபத்தில் பெய்த தொடர் மழையால் தொற்று நோய் பரவாமல் இருக்க அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் இலவச மருத்துவ முகாம் நடத்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அரகண்டநல்லூரில் தமிழக அரசின் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதை பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ் அன்பு தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வந்திருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் அரகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கலந்து கொண்டனர். முன்னதாக செயல் அலுவலர் முருகன், பேரூராட்சி கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
Related Tags :
Next Story