சிறப்பு மருத்துவ முகாம்


சிறப்பு மருத்துவ முகாம்
x

சிறப்பு மருத்துவ முகாமில் ஞானதிரவியம் எம்.பி. கலந்து கொண்டார்

திருநெல்வேலி

முக்கூடல்:

பாப்பாக்குடி யூனியன் பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளை முன்னிட்டு, கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அஷ்ரப் அலி வரவேற்று பேசினார். பள்ளக்கால் ஊராட்சி தலைவர் ராம்சந்துரு முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் செல்வம் வாழ்த்தி பேசினார்.

நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். பாப்பாக்குடி யூனியன் துணைத்தலைவர் மாரிவண்ணமுத்து, சுகாதார மேற்பார்வையாளர் ஜான் ஆன்டனி அருள்தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story