சிறப்பு மருத்துவ முகாம்
பரமத்திவேலூர் அருகே சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் குப்புச்சிபாளையத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மருத்துவ முகாமினை வேலூரில் பேரூராட்சித் தலைவர் லட்சுமி தொடங்கி வைத்தார். பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் துரை செந்தில்குமார், ராஜா, அரசு வக்கீல் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன் வரவேற்றார். முகாமில் 1,023 பேருக்கு பொது மருத்துவம் உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டத. முகாமில் பரமத்தி வட்டார மருத்துவ அலுவலர் கவிதா, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுதமதி, மருத்துவ அலுவலர்கள் மருத்துவ பரிசோதனை செய்து 25 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினர். சுகாதார ஆய்வாளர்கள், சமுதாய சுகாதார நர்சுகள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.