சிறப்பு மருத்துவ முகாம்
மோகனூர் ஒன்றியத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மோகனூர்
மோகனூர் ஒன்றியத்தில் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் உள்ள ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும், அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. முகாமிற்கு மோகனூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி கருமண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேன்மொழி, முனியப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் ரேணுகாதேவி சண்முகம் ஆகியோர் முன்னிலை வசித்தனர். முகாமில் பொது மருத்துவம், கண், பல், சித்தா, தோல், காசநோய், சர்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீர், ரத்த பரிசோதனை உள்பட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டது. மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 25 ஊராட்சிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதில் மோகனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் லாவண்யா, டாக்டர்கள் ரேகா, சண்முகம், பல் டாக்டர் அருண், சித்தா மருத்துவர் தமிழரசி, மோகனூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வராஜா, மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவமல்லா மேற்பார்வையாளர்கள், செவிலியர்கள் உள்பட மருத்துவத்துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.