சிறப்பு மருத்துவ முகாம்
கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் மதகுபட்டியை அடுத்த சொக்கநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் மதகுபட்டியை அடுத்த சொக்கநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.சொக்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜய் சந்திரன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் ராகவேந்திரன், துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் துளசிராமன், சுகாதார மேற்பார்வையாளர்கள் முருகேசன், சரவணகுமார், பூமிராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர் குமார், ஊராட்சி உறுப்பினர்கள் வசந்த நாராயணி, வசந்தி, வள்ளி, சுப்புலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆகியோர் வழங்கினர்.