மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:45 PM GMT)

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது என கலெக்டர் தெரிவித்தார்.

சிவகங்கை

சிவகங்கை

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது என கலெக்டர் தெரிவித்தார்.

கருணாநிதி நூற்றாண்டு விழா

இது தொடர்பாக கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாவட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நாளை(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல், மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யு.டி.ஐ.டி.) விண்ணப்பம் பெறுதல் மற்றும் பிற மறுவாழ்வு உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். இந்த முகாம் காலை 10 மணி முதல் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்.

முகாம்

இந்த முகாமில் மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை, மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யு.டி.ஐ.டி.) பெற விரும்புபவர்கள் 6 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். குறிப்பாக இனி வரும் காலங்களில் அனைத்து அரசு திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற யு.டி.ஐ.டி. அட்டை முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இது நாள்வரை யு.டி.ஐ.டி. அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம்.

. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக ஏற்கனவே மாதாந்திர பராமரிப்பு உதவிதொகை பெற்று பயனடையும் மாற்றுத்திறனாளிகளில் ஆதார் எண் இணைக்காமல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அனுப்பப்பட்டு வந்த பராமரிப்பு உதவித்தொகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு தங்களுடைய ஆதார் அட்டை நகலினை பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் முகாம் நடைபெறும் நாளில் ஒப்படைத்து பராமரிப்பு உதவித்தொகையை தொடர்ந்து பெற்று பயன்பெறுவதற்கும் ஏதுவாக இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story