மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பாஸ்கர பாண்டியன், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். முனிரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார்கள்.
முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆதாா் அட்டை பதிவு, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டம், பிரதமர் வீடு வழங்கும் திட்டம், மானியத்துடன் வங்கி கடன் வழங்கும் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு, மற்றும் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது. மருத்துவ முகாமில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பூங்கொடி ஆனந்தன், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெங்குப்பட்டு ராமன், புலிவலம் நதியாமதன்குமார், சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன், கிராமநிர்வாக அலுவலர் ராஜகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






