மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
x

வாணியம்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான அடையாள அட்டைகள் பெற வாணியம்பாடி நகராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடந்தது. நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதிகுமார் தலைமை தாங்கினார்.ஆணையாளர் மாரிசெல்வி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.

ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையிலான மருத்துவ குழுவினர் முகாமில் கலந்துக் கொண்டு சிகிச்சை அளித்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் வங்கிக்கடனுக்கான பரிந்துரை கடிதங்களை பயனாளிகளுக்கு வழங்கினர்.

இதில் 104 மாற்றுத்திறனாளிகள் கலந்துக் கொண்டனர்.


Next Story