மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 22-ந் தேதி முதல் நடக்கிறது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் பள்ளிக்கு வர இயலாமல் உள்ள இயலாமையுடைய சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 23-ந் தேதி ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 25-ந் தேதி ஆம்பூர் ஐ.இ.எல்.சி. காதுகேளாதோர் நிதியுதவி மேல்நிலைப்பள்ளியிலும், 26-ந் தேதி நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 29-ந் தேதி ஜோலார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 30-ந் தேதி கந்திலி கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.
முகாமில் தகுதியான பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வங்கப்படுகிறது. இந்த முகாமில் 3 புகைப்படங்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.