மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-10T00:15:36+05:30)

துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத்தலைவர் பானு சேகர், வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் வரவேற்றார். இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை தொடங்கி வைத்து அடையாள அட்டைகள் மற்றும் உபகரணங்களை வழங்கினார். முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் வட்டார மேற்பார்வையாளர் புகழேந்தி, ஓன்றியக்குழு உறுப்பினர் அங்குதன், ஊராட்சி துணைத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story