மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
x

கம்பத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

தேனி

தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கம்பம் உத்தமபுரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன், கம்பம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாரதராணி, கம்பம் நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் பொதுமருத்துவம், கண், காது, எலும்பு உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான புதிய தேசிய அடையாள அட்டை, பழைய தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யூடிஐடி) பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பஸ், ரெயில்களில் பயணம் செய்ய சலுகை சான்றிதழ் வழங்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு சிலர் பரிந்துரை செய்யப்பட்டனர். தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், கம்பம் வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.


Next Story