காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் - கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் - கலெக்டர் தகவல்
x

காஞ்சீபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

பல்வேறு அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை வட்டார வளர்ச்சி அலுவலகம், காஞ்சீபுரம். 9-ந்தேதி (சனிக்கிழமை) - வட்டார வளர்ச்சி அலுவலகம், வாலாஜாபாத். 11-ந் தேதி (திங்கட்கிழமை) வட்டார வளர்ச்சி அலுவலகம், உத்திரமேரூர். 12-ந்தேதி (செவ்வாய்கிழமை) வட்டார வளர்ச்சி அலுவலகம், குன்றத்தூர். 13-ந்தேதி (புதன்கிழமை) வட்டார வளர்ச்சி அலுவலகம், ஸ்ரீபெரும்புதூர் பொன்ற இடங்களில் தொடர் முகாம்கள் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள், UDID Smart Card பெற விண்ணப்பிக்க தவறியவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

டர்டர்களால் மருத்துவச்சான்று, உதவித்தொகை, வங்கி கடன், உதவி உபகரணங்கள், ஆவின் பால் முகவர், வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக தனியார் துறையில் வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பற்றோர்களுக்கான உதவித்தொகை பதிவு, மாவட்ட தொழில் மையம் சார்பில் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம்.

வீட்டுக்கடன் விண்ணப்பங்கள்

மத்திய கூட்டுறவு வங்கியின் வாயிலாக கடன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடு கட்டுவதற்கு வீட்டுக்கடன் விண்ணப்பங்களை அளிக்கலாம். முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பதிவு மேற்கொள்ளுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு அலிம்கோ ஒன்றிய அரசின் திட்டங்கள் வாயிலாக, உபகரணங்கள் பெறுவதற்கும் வருமானசான்று வருவாய்துறையின் வாயிலாக வழங்கப்படும். இந்த முகாமில் வருவாய்துறை, மருத்துவத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தாட்கோ, மாவட்ட தொழில் மையம், பள்ளி கல்வித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், போக்குவரத்துத்துறை, (ஆதார் அட்டை), முதல்-அமைச்சர் காப்பீட்டுதிட்டம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் போன்ற பல்வேறு துறை அலுவலர்கள் மூலம் நலத்திட்டங்கள் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்படும்.

இந்தமுகாமிற்கு வரும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தேசிய அடையாள அட்டை, ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம் - 4 போன்ற ஆவணங்களுடன் அசல் மற்றும் நகலுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story