மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்க வட்டார அளவில் சிறப்பு மருத்துவ முகாம்கள்


மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்க வட்டார அளவில் சிறப்பு மருத்துவ முகாம்கள்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வழங்க வட்டார அளவிலான சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வழங்க வட்டார அளவிலான சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ முகாம்கள்

பள்ளிக்கல்வி துறையின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோர் ஒருங்கிணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க வருகிற 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வட்டார அளவிலான மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

அதன்படி 12-ந் தேதி செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிலும், 13-ந் தேதி திருவண்ணாமலை டவுன்ஹால் நடுநிலைப்பள்ளிலும், 14-ந் தேதி வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிலும், 19-ந் தேதி செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 20-ந் தேதி மேற்கு ஆரணி வட்டார வளமையத்திலும், 21-ந் தேதி தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிலும் நடைபெற உள்ளது.

மேலும் 26-ந் தேதி போளுர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 27-ந் தேதி ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிலும், க்டோபர் மாதம் 3-ந் தேதி ஜவ்வாதுமலையிலும், 4-ந் தேதி சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 5-ந் தேதி கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிலும், 10-ந் தேதி பெரணமல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிலும் நடைபெற உள்ளது.

11-ந் தேதி கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 12-ந் தேதி வெம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 17-ந் தேதி புதுப்பாளையம் வட்டார வள மையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிலும், 18-ந் தேதி அனகாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 19-ந் தேதி துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், 20-ந் தேதி தெள்ளாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.

தற்காலிக நிறுத்தம்

இந்த சிறப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த யு.டி.ஐ.டி. அடையாள அட்டை ஆன்லைன் பதிவு, முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆதார் அட்டை போன்றவை வழங்கப்படும்.

முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் உரிய அசல் மற்றும் நகல் ஆவணங்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம் 4 ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

மேலும் பிரதிவாரம் வியாழக்கிழமைகளில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் நடைபெறும் முகாம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

மீண்டும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் முகாம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story