சிறப்பு மருத்துவ திட்ட குழுவினர் ஆய்வு


சிறப்பு மருத்துவ திட்ட குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ திட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ திட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.

சிறப்பு குழுவினர் ஆய்வு

தமிழக சுகாதாரத்துறையின் காயகல்ப சிறப்பு மருத்துவ திட்ட ஆய்வு குழுவில், நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அருண், செந்தில்குமார், செவிலியர் விஜய் ஆகியோர் அடங்கிய குழுவினர், வால்பாறை அரசு ஆஸ்பத்திரியின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்து வினியோகம், தூய்மை மற்றும் பராமரிப்பு பணி ஆகியவற்ைற கேட்டறிந்தனர். மேலும் சித்த, ஆயுர்வேத மருத்துவ பிரிவுகளையும் பார்வையிட்டனர். குறிப்பாக தூய்மை பணியாளர்களுக்கு செயல்விளக்கம் அளித்து, பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள். இது தவிர ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்காக மேற்கொள்ளப்படும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தனர்.

அறிக்கை

இதையடுத்து உள் நோயாளிகள், வெளிநோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?, முறையான மருத்துவ சிகிச்சைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஆய்வகம், எக்ஸ்ரே, ஈ.சி.ஜி. போன்ற தொழில்நுட்ப பிரிவுகளின் செயல்பாடுகளையும் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின் முடிவில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை அடிப்படையில் ஆஸ்பத்திரிக்கு தேவையான நிதி உதவி வழங்குவது, தரம் உயர்த்துவது, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போன்ற உதவிகளை சுகாதாரத்துறை மேற்கொள்ளும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த காயகல்ப சிறப்பு மருத்துவ திட்ட ஆய்வு குழுவினரை தலைமை டாக்டர் நவரத்தின ராஜா தலைமையில் மகப்பேறு டாக்டர் மகேஷ் ஆனந்தி, தலைமை செவிலியர் லதா, தலைமை மருந்தாளுனர் கலைச்செல்வன் ஆகியோர் வரவேற்றனர்.


Next Story