மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கூட்டம்


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கூட்டம்
x

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர மாற்றுத்திறனாளிகள் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டு அறிந்து, அதற்கு பதில் அளித்தார். கூட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட தாலுகாவில் உள்ள 60-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 27 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளின் முக்கிய கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story