அரசு தரப்பு வக்கீல்களுக்கு கட்டணம் வழங்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு


அரசு தரப்பு வக்கீல்களுக்கு கட்டணம் வழங்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு
x

அரசு தரப்பு வக்கீல்களுக்கு கட்டணம் வழங்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

தமிழ்நாடு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பணியாற்றிய ராமசாமி. இவர், அரசு தரப்புக்கு ஆஜராகி வாதிட்டதற்காகக் கட்டணத்தொகை ரூ.1 கோடியே 95 லட்சத்து ஆயிரத்து 622 -ஐ வழங்காமல் அரசு பாக்கி வைத்தது. இது தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, 2 வாரத்துக்குள் பாக்கித்தொகையை வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அரசு கடந்த 2012-ம் ஆண்டு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ்பாபு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பாக்கித்தொகையை வழங்கி விட்டதாகக்கூறி அட்வகேட் ஜெனரல் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசு வக்கீல்களுக்கான கட்டண நடைமுறைகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரி ஒருவரை தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரி, அரசுக்காக ஆஜராகும் வக்கீல்களுக்கு வழங்க வேண்டிய கட்டணத்துக்கான கோரிக்கைகளை பரிசீலித்ததும், 30 நாட்களில் அந்தத்தொகையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். சிறப்பு அதிகாரியின் நியமனம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, அதுகுறித்த அறிக்கையை வருகிற ஆகஸ்டு 2-ந்தேதி தாக்கல் செய்யவேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.


Next Story