கோவில்களில் சித்ரா பவுர்ணமி விழா
கோவில்களில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.
நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் தட்டி கிராமத்தில் உள்ள வேலாயுதசாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது. இதனைமுன்னிட்டு நீடாமங்கலம் கோரையாறு படித்துறை பிள்ளையார் கோவிலில் இருந்து கிராமிய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து பல்வேறு வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து கோவிலை வந்தடைந்தனர். அங்கு வேலாயுதசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைமுன்னிட்டு ராஜகணபதி, யமுனாம்பாள் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. மதியம் அன்னதானம் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோவிலில் சித்ராபவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.