ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
மூங்கில்துறைப்பட்டு அருகே ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே ராவத்தநல்லூரில் சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாத முதல் நாளான நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் மூங்கில்துறைப்பட்டு பாலமுருகன் கோவில், புதுப்பட்டு காளியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
Related Tags :
Next Story