லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை


லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை
x

உளுந்தூர்பேட்டை அருகே லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் கிராமத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் நேற்று புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவில், எலவனாசூர்கோட்டை ராஜா நாராயண பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.


Next Story