ஆடிப்பூரத்தையொட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ஆடிப்பூரத்தையொட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் காட்டூர் காங்குலைனில் முனியப்பன் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில், அம்மனுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வளையல்களால் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் தலைமை பூசாரி பாலன் சிறப்பு பூஜைகளை செய்திருந்தார்.
இதேபோல சிறுமுகை அடுத்து இடுகம்பாளையத்தில் உள்ள அனுமந்தராய சுவாமி கோவில் ஆடி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. காலை 5.30 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, 8 மணிக்கு கால சந்தி பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை ஆகியவை நடைபெற்றன.
கோவில் தலைமை அர்ச்சகர் ராஜேந்திரன் சிறப்பு பூஜைகளை செய்திருந்தார். விழாவில் கோவை மாதம்பட்டி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் ஆதீனம் ஸ்ரீ விஜயராகவ சுவாமிகள் சொற்பொழிவு ஆற்றினார். மாலை 5 மணிக்கு உற்சவர் புறப்பாடு, இரவு 8 மணிக்கு ஏகாந்த சேவையுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது. இதில் விழா குழு தலைவர் எம்.எஸ்.ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் பி. எஸ். லோகநாதன் செயல் அலுவலர் சா.வெண்ணிலா ஆகியோர் செய்திருந்தனர்.
----
Reporter : A.N.SHANMUGAM Location : Coimbatore - METTUPPALAYAM