முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் சாமி தரிசனம்

முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் சாமி தரிசனம் செய்தார்.
இளையான்குடி
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வி.ப.ஜெயபிரதீப் வழிபாடு செய்தார். இதனை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் அய்யாச்சாமி ஆகியோரது தலைமையிலும், இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கனகராஜா முன்னிலையிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பழனி, மாநில மாணவர் அணி இணை செயலாளர் ஆசைத்தம்பி, மாநில இளைஞரணி இணை செயலாளர் திருஞானம், மாவட்ட மாணவரணி செயலாளர் மாரிமுத்து, மாவட்ட ஐ.டி. விங் இணை செயலாளர் மோகன், ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், முருகேசன், கிருஷ்ணபிரபு, பாண்டி, தொகுதி செயலாளர் நாகராஜன், ஒன்றிய துணை செயலாளர்கள் கருப்புசாமி, மலைராணி, காரிச்சாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுகுமாரன், மாவட்ட பிரதிநிதி கண்ணன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் சண்முகம், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் சேகர், ஒன்றிய ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் தியாகராஜன், ஒன்றிய மீனவர் அணி கோபால், ஒன்றிய ஜெயலலிதா பேரவை முத்து இருளன், நகர இளைஞரணி உக்கிரபாண்டி, நிர்வாகிகள் பாண்டி, பூமி, இளங்கோ, களஞ்சியம், கண்ணன், பிரேம்குமார் மற்றும் மகளிர் அணி சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.