மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ஆனி மாத பவுர்ணமியையொட்டி மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்புவனம்
ஆனி மாத பவுர்ணமியையொட்டி மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மடப்புரம் பத்திரகாளியம்மன்
திருப்புவனம் அருகே மடப்புரத்தில் தென்மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார், பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும் மற்ற தினங்களில் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். மேலும் தமிழ், ஆங்கில வருட பிறப்புக்கள் மற்றும் ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமியில் பத்திரகாளி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்து பின்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும். அது சமயம் இரவு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.
பக்தர்கள் தரிசனம்
நேற்று முன்தினம் இரவு ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு பத்திரகாளி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், திருமஞ்சனபொடி உள்பட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்பு பத்திரகாளி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு நேரங்களில் பெரியார் பஸ் நிலையம் செல்ல மடப்புரத்தில் இருந்து பஸ் வசதிகள் சரியாக இல்லாததால் திருப்புவனத்திற்கு ஆட்டோவில் வந்து பிறகு பெரியார் பஸ்நிலையம் சென்றனர். பவுர்ணமி பூஜை போன்ற முக்கியமான நாட்களில் இரவு நேரங்களில் மடப்புரத்திலிருந்து பெரியார் பஸ் நிலையத்திற்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.