சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை


சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:16:59+05:30)

சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை

நீலகிரி

கூடலூர்

கூடலூர் ஹெல்த்கேம்ப் பகுதியில் சத்ய சாய்பாபா கோவில் உள்ளது. இந்த நிலையில் நேற்று சாய்பாபா 87-வது பிறந்தநாளையொட்டி சத்ய சாய்பாபா கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி காலை 11 மணிக்கு பஜனை, வேத பாராயணம், மதியம் 12 மணிக்கு சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 1 மணிக்கு மங்கல ஆரத்தி காண்பிக்கப்பட்டது. முன்னதாக ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சத்யசாய் சேவா சமிதி பொறுப்பாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story