சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை
ராம நவமியையொட்டி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோயம்புத்தூர்
ஸ்ரீ ராம நவமியையொட்டி, கோவையில் உள்ள ஸ்ரீ நாக சாயி மந்திர் சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற் றது. நேற்று காலை 9 மணிக்கு 6 கலசங்கள் வைத்து சுதர்சன ஹோமம், லட்சுமி பூஜை, யாக சாலை பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து கலசத்தில் உள்ள புனிதநீரை வைத்து ஸ்ரீ நாகசாயி மற்றும் சாய்பாபாவுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத அனைத்து சன்னதிகளி லும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பல வகை இனிப்புகள் மற்றும் மலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக் கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் பஜனை நடை பெற்றது. மாலை 7.30 மணிக்கு தங்க தேரில் சாய்பாபா கோவிலை சுற்றி உலா சென்றார்.
Next Story