சக்தி மலை சிவன் கோவிலில் சிறப்பு பூஜை
பிரதோஷத்தையொட்டி சக்தி மலை சிவன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
கோத்தகிரி
ஒவ்வொரு மாதமும் சிவன் கோவில்களில் பிரதோஷம் மற்றும் சனி பிரதோஷ நாட்களில் யாக பூஜை, அபிஷேக பூஜை நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஆனி மாத சனிக்கிழமை பிரதோஷ நாளான நேற்று கோத்தகிரி சக்தி மலையில் உள்ள சிவன் கோவிலில் காலை 10.30 மணிக்கு ஹோம பூஜை நடந்தது. மாலை 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை லிங்கேஸ்வரருக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் அபிஷேக பூஜை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. மேலும் சிவபெருமானின் வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அருகம்புல் சாற்றி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் கோத்தகிரி கடை வீதி மாரியம்மன் கோவிலில் உள்ள லிங்கேஸ்வரருக்கும் பிரதோஷத்தை யொட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் விரதமிருந்து கலந்துகொண்டு லிங்க வடிவத்தில் காட்சி அளித்த சிவபெருமானை தரிசனம் செய்தனர்.