சோமநாதர் கோவிலில் சிறப்பு பூஜை


சோமநாதர் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 20 July 2023 4:02 PM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே சோமநாதர் கோவிலில் சிறப்பு பூஜை

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடையில் சோமசுந்தரி அம்பிகா சமேத சோமநாதர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு முடிந்து 11 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் சிறப்பு பூஜைகள் கடந்த 15-ந் தேதி அனுக்ஞை, விநாயகர் வழிபாடுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து 16-ந் தேதி சோமசுந்தரி அம்பிகா, சோமநாதர் ஆகிய சாமிகளுக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முதல்நாள் சிறப்பு யாக பூஜை, தீபாராதனை, அருள் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. இரவு சோமசுந்தரி அம்பிகா, சோமநாதர் சாமி வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் பண்டாரவாடை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்திருந்தனர்.


Next Story