தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை


தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
x

வைகாசி விசாகத்தையொட்டி தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் மலைமேல் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 21 தீர்த்தங்கள் எடுத்து வரப்பெற்று, மலையடிவாரத்தில் உற்சவருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தோரணமலையான் பஜனை குழுவினர் பஜனை வழிபாடு நடத்தினர். காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகள் கோவில் பரம்பரை அறங்காவலர் ஏ.செண்பகராமன் தலைமையில் செய்யப்பட்டு இருந்தது.


Next Story