திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் சிறப்பு பூஜை
பங்குனி மாத மக நட்சத்திரத்தையொட்டி திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
திருவாரூர்
குடவாசல்:
குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் நேற்று பங்குனி மாத மக நட்சத்திரத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக கார்த்தியாயினி சமேத கல்யாண சுந்தரேஸ்வரருக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு 1,000 வெள்ளி தாமரை மலர்கள் மற்றும் 1,000 தாமரைப்பூக்களால் சிறப்பு அர்ச்சனை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், மக நட்சத்திர வழிபாட்டுக்குழு செயலாளர் சீதாராமன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story