விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை


விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
x

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரூர்

நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள வருண கணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி வருண கணபதிக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வருண கணபதி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதேபோல் புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள விநாயகர், நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோவில் உள்ள விநாயகர் மற்றும் நொய்யல் சுற்று வட்டார பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உள்ள செல்வ விநாயகருக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மலர்கள், அருகம்புல்லால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் காகிதபுரம் வல்லபை கணபதி, புகழிமலை அடிவாரத்தில் உள்ள விநாயகர், ஓம் சக்தி நகர் கற்பக விநாயகர், அய்யப்பன் கோவில் உள்ள விநாயகர், ஈ.ஐ.டி. பாரி விநாயகர் ஆகிய கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.


Next Story