கருப்பண்ணசாமி கோவிலில் 18 அடி உயர அரிவாளுக்கு சிறப்பு பூஜை


கருப்பண்ணசாமி கோவிலில் 18 அடி உயர அரிவாளுக்கு சிறப்பு பூஜை
x
நாமக்கல்

பரமத்திவேலூர்

பிலிக்கல்பாளையம் அருகே கருப்பண்ண சாமி கோவில் அமைந்துள்ளது. காவிரி கரையோரத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண்ண சாமி கோவில் வளாகத்தில் சுமார் 18 அடி உயரத்தில் 750 கிலோ எடையில் இரும்பாலான அரிவாளை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கருப்பண்ண சாமி மற்றும் 18 அடி உயரமுள்ள அரிவாள் ஆகியவற்றிக்கு 16 வகையான மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் பிலிக்கல்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பிலிக்கல்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story