செந்தில்பாலாஜி பூரண குணமடைய வேண்டி சிறப்பு பூஜை
அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண குணமடைய வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கரூர்
சென்னையில் நேற்று முன்தினம் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்ற போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் செந்தில்பாலாஜி பூரண குணமடைய வேண்டி நேற்று தி.மு.க.வினர் கரூர் பிரம்ம தீர்த்தம் சாலையில் உள்ள வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தியும், கரூர் மாரியம்மன் கோவில் முன்பு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.
Related Tags :
Next Story