அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

கள்ளக்குறிச்சி பகுதியில்ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஸ்ரீ சிதம்பரஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி அம்மன் சன்னதியில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு வளையல் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு படைக்கப்பட்ட வளையல், தாலி கயிறுகள் ஆகியவை பெண் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

காசிவிஸ்வநாதர்கோவில்

இதேபோல் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள சிவதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வளையல்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.


Next Story