அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி ராகு கால சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி துர்க்கை அம்மனுக்கு இளநீர், பன்னீர், பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், திருமஞ்சனம் போன்ற பல்வேறு திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகுகால பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றியும், மஞ்சள், குங்குமம் கொடுத்து அர்ச்சனை செய்தும் வழிபட்டனர். பெண்கள் துர்க்கை அம்மனுக்கு துதிபாடல் பாடி வழிபட்டனர்.

பக்தர்கள் தரிசனம்

ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி தேவபாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதேபோல் பூட்டை மாரியம்மன் கோவில், சங்கராபுரம் வாசவி அம்மன், புற்றுமாரியம்மன், நாக தேவதையம்மன், தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன், மகாநாட்டு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story