அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

ஆடி 3-வது வெள்ளி

ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அனைத்து மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து நடந்த சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆடி 3-வது வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கோவில் முன்பு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

நித்ய சுமங்கலி மாரியம்மன்

ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று ஆடி 3-வது வெள்ளியையொட்டி நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு அபிஷேகம் தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அம்மனுக்கு அன்ன அலங்காரம் செய்யப்பட்டது.

காலை முதல் இரவு வரை ராசிபுரம் மட்டுமல்லாமல் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் குடும்பத்துடன் வந்திருந்து அம்மனை தரிசித்து விட்டு சென்றனர். அதேபோல் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் எல்லை மாரியம்மன் கோவில் உள்பட அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பெரிய மாரியம்மன்

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன், காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் பார்வதி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஊஞ்சள் உற்சவம்

மோகனூர் வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் உள்ள பத்மாவதி தாயாருக்கு ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஊஞ்சல் சேவை நடைபெற்து. இதையொட்டி அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.


Next Story