அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி கோவையில் அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவை

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி கோவையில் அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆடிமுதல் வெள்ளி

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று கோவையில் உள்ள அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதன்படி கோவை கோனியம்மன், தண்டு மாரியம்மன், காட்டூர் முத்துமாரியம்மன், புலியகுளம் மாரியம்மன். பாப்பநாயக்கன் பாளையம் பழையூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோவை பெரியகடை வீதி மாகாளியம்மன் சிம்ம வாகனத்தில் அமர்ந்தவாறு விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித் தார். தியாகி குமரன் வீதி அருகே பிளேக் மாரியம்மன் பனை ஓலையில் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

சிறப்பு அலங்காரம்

ராஜூ செட்டியார் வீதியில் உள்ள வன பத்ரகாளியம்மனுக்கு பல்வேறு வகை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காட்டூர் முத்துமாரியம்மன், காட்டூர் மாரியம்மன், பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் மாரியம்மன் கோவிலில் அம்மன் மலர் அலங்காரத்திலும் காட்சி அளித்தனர்.

பெரியகடை வீதி அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் வேப்பிலை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அம்மன் கோவில்களில் நேற்று பெண்கள் மற்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

சூலக்கல் மாரியம்மன்

கோவை கணபதி- மணியகாரம்பாளையம் ரோடு அண்ணா நகரில் சூலக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.

அம்மனுக்கு மலர்களாலும், எலுமிச்சை பழங்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

கோவை -மசக்காளிபாளையம் மெயின் ரோட்டில் உள்ள கவையகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


Next Story