அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி கோவையில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கோயம்புத்தூர்

ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி கோவையில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆடி 3-வது வெள்ளிக்கிழமை

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் ஆடிவெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம், ஆடி கிருத்திகை, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடித்தபசு, கருடபஞ்சமி என சுப தினங்கள் வருகின்றன.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி நேற்று ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி கோவை கோனியம்மன், தண்டு மாரியம்மன், காட்டூர் முத்துமாரியம்மன், புலியகுளம் மாரியம்மன். பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரம்

பெரியகடை வீதி மாகாளியம்மன் நவதானியங்களால் ராகு, கேது அலங்காரத்திலும், தியாகி குமரன் வீதி அருகே உள்ள பிளேக் மாரியம்மன் பாலசுந்தரி அலங்காரத்திலும், சலீவன் வீதி காமாட்சி அம்மன் மகாலட்சுமி அலங்காரத்திலும், செட்டி வீதி பத்திரகாளியம்மன் சந்தான லட்சுமி அலங்காரத்திலும், பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் மாரியம்மன் கோவிலில் அம்மன் புஷ்ப அலங்காரத்திலும், கெம்பட்டி காலனி எல்.ஜி.தோட்டம் முத்துமாரியம் மன் வளையல் அலங்காரத் திலும் அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

வடவள்ளி

சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அம்மன், எலுமிச்சை பழ அலங்காரத்தில் காட்சி அளித்தார். .

சீரநாயக்கன்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் வளையல் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். கணபதி அண்ணாநகர்ஸ்ரீ சூலக்கல் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் வண்ண பட்டாடை மற்றும் பலவித மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.


Next Story