அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.

நீலகிரி

கூடலூர்,

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.

ஆடி கடைசி வெள்ளிக்கிழமை

ஆண்டுதோறும் ஆடி மாதம் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களை கட்டி வருகிறது. கடந்த மாதம் 17-ந் தேதி ஆடி பிறந்தது. இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

மசினகுடி அருகே பொக்காபுரம் மாரியம்மன் கோவில், மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவில், 2-ம் மைல் முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. கடந்த வாரம் பக்தர்கள் செல்வ வளமுடன் வாழ வேண்டி மேல் கூடலூர் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கூழ் மற்றும் கஞ்சி படையலிட்டு பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

காய்கறி, பழங்களால் அலங்காரம்

இந்தநிலையில் பக்தர்கள் உணவு தட்டுப்பாடு இன்றி வாழ வேண்டிநேற்று காய்கறி, பழங்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 5.30 மணி முதல் மதியம் 12 மணி வரை விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஏற்றியும், கஞ்சி, கூழ் ஊற்றியும் வழிபட்டனர். இதேபோல் கூடலூர் 2-ம் மைல் முத்து மாரியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக சுமந்து வந்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.

ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். காந்தல் மூவுலகரசியம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. ஊட்டி புது அக்ரஹாரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் திருவிளக்கு வழிபாடு நடைப்பெற்றது. கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவிலில் 12-ம் ஆண்டு கனி விளக்கு பூஜை நடந்தது. பண்ணாரி மாரியம்மன் கோவில், டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


Next Story