முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 14 July 2023 2:00 AM IST (Updated: 14 July 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

நீலகிரி

கூடலூர்

ஆனி மாத கிருத்திகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூடலூர் குசுமகிரி, சந்தன மலை, நந்தட்டி முருகன் கோவில்களில் காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

இதையடுத்து 10 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story