புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 8 Oct 2023 12:29 AM IST (Updated: 8 Oct 2023 12:29 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி் மாவட்டத்தில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதனையொட்டி நேற்று காலை 6 மணிக்கு தில்லை கோவிந்தராஜ பெருமாள் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தில்லை கோவிந்தராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் தி்ரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கோவிலூர்

திருக்கோவிலூரில் உள்ள பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் மகோத்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாத மகோத்சவம் கடந்த மாதம் 18-ந் தேதி வழக்கம்போல் வெகு விமரிசையாக தொடங்கியது. இந்த விழா வருகிற 17-ந்தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில், நேற்று புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமை என்பதால் பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திருக்கோவிலூர் தொழிலதிபர் ஜே.முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி தேகளீச ராமானுஜாச்சாரியார் மேற்பார்வையில் கோவில் தேவஸ்தான ஏஜென்ட் கிருஷ்ணன் சாமிகள் தலைமையில் விழா குழுவினர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நேற்று 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று காலை 8 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவரங்கம்

வாணாபுரம் அருகே திருவரங்கத்தில் ரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.


Next Story