சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை


சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் உள்ள பிரசித்திபெற்ற நஞ்சுண்டதேசிக ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி கோவில் வளாகத்தில் உள்ள நந்திபகவானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சிறுநாகலூர் ஆத்மநாதசுவாமி கோவில், எறஞ்சி கைலாசநாதர் கோவில், வடபூண்டி கைலாசநாதர் கோவில், வடதொரசலூர் அகத்தீஸ்வரர் கோவில், திம்மலை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில், குடியநல்லூர் கைலாசநாதர் கோவில், முடியனூர் அண்ணாமலை ஈஸ்வரர் கோவில், கனங்கூர் ராமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன்கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் சட்ட கணேசன் செய்திருந்தார்.

1 More update

Next Story