தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை


தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை
x

கரூரில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கரூர்

புனித வெள்ளி

கரூர் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன்கிழமையில் இருந்து 40 நாட்கள் தவக்காலத்தை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அசைவ உணவினை தவிர்ப்பது, தானம் செய்வது, இறைவனை நினைத்து மனமுருகி ஜெபம் செய்வது என்பன போன்ற செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டனர். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி நேற்று புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி கரூரில் புனித தெரசம்மாள் தேவா லய பள்ளி மைதானத்தில் நேற்று சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாக நடித்து காட்டப்பட்டது.

பிரார்த்தனை

அப்போது ஏசு சிலுவை சுமந்து அறையப்பட்டு பல்வேறு துன்பங்களுக்கு ஆட்படுத்தப்பட்ட போதும் கூட, பகைவரை மன்னித்தருளினார். எனவே மனிதர்களாகிய நாமும் ஒருவரையொருவர் மன்னித்து ஏற்கும் மனப்பாங்கை பெற வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சிலுவைப்பாதைக்குரிய பாடல்கள் பாடப்பட்டன. மேலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதேபோல் புனிதவெள்ளியை முன்னிட்டு சர்ச் கார்னரில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் ஹைஸ்கூல் மேடு பகுதியில் உள்ள பெந்தெகெஸ்தே ஜெப சபையில் போதகர் டேவிட்ராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல முல்லை நகர் இந்திய சுவிஷேக திருச்சபை உலகரட்சகர் ஆலயம், புகழூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம், புனித அந்தோணியார் ஆலயம், காகிதபுரம் கிறிஸ்துவ ஆலயத்திலும் ஈஸ்டர் தினத்தையொட்டி சிறப்பு பிராத்தனைகள் நடந்தது.


Next Story