தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 25 Dec 2022 6:45 PM GMT (Updated: 25 Dec 2022 6:46 PM GMT)

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதன்படி, மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஈருடையாம்பட்டு தூயவிண்ணரசி ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் நள்ளிரவு 11 மணிக்கு தொடங்கிய கூட்டு திருப்பலி அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது. இதேபோல் சவேரியார் பாளையம் புனிதசவேரியார் ஆலயம், மைக்கேல்புரம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், அருளம்பாடி சின்னப்பர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு கூட்டு திருப்பலி ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஏசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் குடில்கள் அமைத்து அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் கூட்டம் அதிக அளவில் இருந்த தால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சங்கராபுரம் அருகே விரியூரில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை சகாய செல்வராஜ் தலைமையில் கூட்டுப் பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டதோடு, உறவினர்கள், நண்பர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதேபோல் பழையனூர் புனித சூசையப்பர் ஆலயம், சோழம்பட்டு, காட்டுவன்னஞ்சூர் புனித அந்தோணி யார் ஆலயம், வடசிறுவள்ளூர் குழந்தை ஏசு ஆலயம், அழகாபுரம் புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.


Next Story