தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்

கிறிஸ்துமஸ் பண்டிகை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதன்படி பெரம்பலூரில் உள்ள புனித பனிமய மாதா திருத்தலத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தேவாலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இரவு 12 மணிக்கு, பங்கு தந்தை ராஜமாணிக்கம் இயேசு கிறிஸ்து பிறப்பின் அடையாளமாக திருத்தலத்தில் இருந்து ஒரு குழந்தை இயேசு சொரூபத்தை பிரார்த்தனை செய்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடிலில் வைத்தார். இதனை தொடர்ந்து இயேசு கிறிஸ்து பிறப்பின் மேன்மைகளை கூறும் பாடல்கள் இசைக்கப்பட்டன. உலகில் சமத்துவம், சகோதரத்துவத்திற்காக இயேசு கிறிஸ்து ஆற்றிய நற்செயல்கள் குறித்து விளக்கப்பட்டது. பின்பு திருப்பலி நள்ளிரவு 1 மணி வரை தொடர்ந்து நடந்தது. இதில் தேவாலய கிறிஸ்தவ கன்னிகையர், கத்தோலிக்க சங்க நிர்வாகிகள், இளைஞர் மன்ற நிர்வாகிகள், நகர்ப்புற மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் உள்ளிட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. அதிலும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு பிரார்த்தனை

இதேபோல் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. திருத்தலத்திலும், பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள டி.இ.எல்.சி. தூய யோவான் திருத்தலத்திலும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பாளையத்தில் உள்ள புனித சூசையப்பர் தேவாலயம் மற்றும் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் ஆகிய தாலுகாக்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மின் விளக்குகளால் ஜொலித்தன

மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்கள் அலங்கார மின் விளக்குகளால் ஜொலித்தன. கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து தேவாலயங்களுக்கு வந்தனர். சிலர் தங்களது குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா ஆடை அணிந்து அழைத்து வந்திருந்ததை காணமுடிந்தது. கிறி


Next Story